Kogilavani / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சீரற்ற நிர்வாகத்தை நடத்தும் பல பள்ளிவாயல்களினால், சொத்துக்கள் முறையற்றுக் கையாளப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
எனவே, நாட்டின் சகல பாகங்களிலும் பதிவு செய்யபடாமல் இயங்கி வரும் அனைத்துப் பள்ளி வாசல்களையும், காலதாமதமின்றி உடன் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றும் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பள்ளிவாயல்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் மிகவும் தாமதமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதையடுத்து இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவு செய்யப்படாதிருக்கும் அனைத்து பள்ளிவாயல்களையும் உடன் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
பல பள்ளிவாயல்களின் நிர்வாகங்கள் சீரற்றுக் காணப்படுகின்றன.
பள்ளிவாயல் நிர்வாகத்தினரால் வக்பு சொத்துக்கள் முறையீனமாக கையாளப்படுகின்றன.
உரிய பதவிக்காலம் முடிவடைந்த பள்ளிவாயல்களின் புதிய நிர்வாகத்தை விரைவாக தெரிவு செய்வதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் பள்ளிவாயல்களின் நிர்வாக ரீதியான செயற்பாடுகள் மேற்பார்வை செய்வதை வலுப்படுத்தவும் வேண்டும்' என்றார்.
15 minute ago
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
43 minute ago
3 hours ago