2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பரீட் உட்பட 11 பேரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு

Administrator   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை(21) மாலை இடம்பெற்ற கலவரத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட 11 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினராக இடம்பற்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து பட்டாசுகள் வெடிக்க வைத்து ஆரவாரம், ஊர்வலம் என்பன இடம்பெற்றன.

இதன்போது  இடம்பெற்ற கலவரத்தில் 11 பேர் காயமடைந்தனர்

இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் சனிக்கிழமை(22) ஏழு பேர் கைது செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இன்று மீண்டும் அவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

மேலும்,இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்படும் ஏனைய சந்தேக நபர்களையும் தேசிய தௌஹீத் ஜமா அத் பள்ளிவாசலை தாக்க முற்பட்டவர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும் நீதிபதி காத்தான்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X