2025 மே 09, வெள்ளிக்கிழமை

'பரீட்சையில் தோற்றவர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போனவர்கள் அல்ல'

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பரீட்சையில் தோற்றுப்போன மாணவர்கள், வாழ்க்கையிலும் தோற்றுப் போனவர்கள் என்று அர்த்தப்படுத்தி விடக்கூடாது என ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவரும் முன்னாள் அதிபருமான ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

ஏறாவூரில் புதன்கிழமை(13) இடம்பெற்ற வறிய மாணவர்களுக்கு இலவசமாக பாதணிகள் விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஒருவர் கல்வியில் ஒரு முறை தவறிவிடுதல் என்பது அவர் தமது வாழ்நாள் முழுவதும் தவறிவிட்டார் என்று அர்த்தமாகாது.

கல்வியில் தவறிப்போன எத்தனையோ பேர் பின்னாட்களில் மேதைகளாக உருவாகி சரித்திரம் படைத்த வரலாறுகள் இருக்கின்றன.

வறுமை காரணமாக ஒருவர் தமது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுவாராயின் அவருக்கு உதவுவதை சமுதாயத்தில் நல்ல நிலையிலிருக்கும் மற்றையோரின் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும்.

சமகாலத்தில் வறுமையான மாணவர்களும் கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றார்கள்.

ஆகையினால், வறுமை கல்விப் புலமைக்கு ஒரு தடையல்ல என்பதை மாணவர்களும் பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை, ஒழுக்கமும் முயற்சியுமில்லாத கல்வியினால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

கல்வியில் உயரும்போது ஒழுக்கமும் சிறந்த பண்புகளும் கூடவே உயர வேண்டும். இதேவேளை பணிவும் வளர வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X