2025 மே 07, புதன்கிழமை

மாகாண மட்ட கூத்து பெருவிழாவும் கூத்து போட்டியும்

Niroshini   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திளைக்களம் நடத்தும் 2015ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட கூத்துப் பெருவிழாவும் கூத்துப் போட்டியும் நாளை வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை(25) மற்றும் சனிக்கிழமை(26) மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது.

மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கூத்துவிழா, போட்டிகள் நாளை வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்திலும், வெள்ளிக்கிழமை(25) மாலை 5.45 மணிக்கு புதுக்குடியிலுப்பு கண்ணகி அம்மன் ஆலய முன்றலிலும் நடைபெறவுள்ளது.

முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சி.மௌனகுரு, புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய அதிபர் வே.தட்சணாமூர்த்தி, கௌரவ அதிதிகளாக கவிஞர் மு.கணபதிப்பிள்ளை, பேரிகைக் கலைஞர் கா.பரசுராமன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இரண்டாம் நாள் நிகழ்வில்,பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர ஜீ.சிறிநேசன், புதுவை அமைப்பின் தலைவர் மா.சதாசிவம், கண்ணகை அம்மன் ஆலய தலைவர் அ.குலேந்திரராசா, கொளரவ அதிதிகளாக தலைக் கூத்துக் கலைஞர் கு.பொன்னம்பலம், கிராமியக்கலைஞர் சி.தங்கராசா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இறுதி நாளான மூன்றாம் நாள் நிகழ்வு சனிக்கிழமை(26) மாலை 5.45 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டப்ளியூ.ஏ.எல்விக்கிரம ஆராச்சி , சிறப்பு அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்காளர் க.சுகிஸ்வரன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி. கா.ஜெ.அருள்பிரகாசம் ,கௌரவ அதிதிகளாக கவிஞர் தேனூரான், ஓவியர் ஈ.குலராஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, கலை நிகழ்வுகள், வடமோடிக் கூத்து ஆற்றுகைகள், தென்மோடிக் கூத்து ஆற்றுகைகள் என்பன நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X