Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணிப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 03 மாடுகளைக் கடத்திக்கொண்டு வந்ததாகக் கூறப்படும் 63 வயதுடைய ஒருவரைக் கைதுசெய்த பொலிஸார், அம்மாடுகளையும் மீட்டுள்ளனர்.
மனித நுகர்வுக்கு உதவாத மாடுகள் இறைச்சிக்காக கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மட்டக்களப்பு, பதுளை வீதிப் பிரதேசத்திலிருந்து ஏறாவூர் நகரப் பகுதிக்கு கடத்திக்கொண்டு வரப்பட்ட இம்மாடுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட 03 மாடுகளும் தற்சமயம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இது பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
15 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
35 minute ago