Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்,எஸ். பாக்கியநாதன்
வட,கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட பூரண ஹர்த்தால் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி வெள்ளிக்கிழமை(13)வட,கிழக்கு முழுவதும் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலுக்கு பங்களிப்புசெய்தும் ஆதரவழங்கியும் ஒத்துழைப்பு நல்கியும் பற்றுதலுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கவனீர்பு போராட்டத்தில இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை வேண்டி சிறைகளில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் எமது இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் முன்னெடுக்கும் சகல கவனீர்பு போராட்டங்களுக்கும் தொடர்ந்தும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குமாறும் வேண்டுகின்றோம்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஏற்கனவே மஹிந்த அரசு எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றியதோ அதுபோன்றே மைத்திரி அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை வாக்குறுதி வழங்கி ஏமாற்றியுள்ளது.
தலைவர் சம்பந்தன் ஐயா ஐனாதிபதிக்கு வழங்கிய உறுதிமொழி காப்பாற்றாத நிலையில் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான வடமாகாண அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரியுடன் கைதிகள் விடுதலையை வலுயுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி விக்கினேஷ்வரன் ஐயாவிடமும் வாக்குறுதி வழங்குயுள்ளார்.நாளை திங்கட்கிழமை பொதுமன்னிப்பு கொடுப்பதற்கான சாத்தியத்தை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகளை இரண்டு அணியாக ஜனாதிபதி சந்தித்தும் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி செயற்படுத்துவாராயின் நல்லாட்சியில் நாடாளுமன்ற பிரதி குழுக்களின் பதவி எதிர்க் கட்சி தலைவர் பதவி தொடர்ந்தும் வகிக்க வேண்டுமா?என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
32 minute ago
1 hours ago