2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'முதலமைச்சரின் அதிகாரம் அறியாத அரசியல்வாதிகள் முரண்படுகின்றனர்'

Thipaan   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மாகாணங்களில் முழு அதிகாரம் கொண்டவர் முதலமைச்சர் என்ற அரசியல் யாப்பு விதிமுறை அறியாத அரசியல்வாதிகள் முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அகமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் வியாழக்கிழமை(29) மாலை கவிஞர் நௌசாத் எழுதிய மௌனத்தின் சத்தங்கள் கவிதை நூல் வெளியீடும் நிகழ்வில் கலந்துகொண்டு உiராற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
 
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் ஏறாவூர் பிரதேச செயலாளர் எஜ்.எல்.எம்.ஹனிபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
இந்த நாட்டிலிருந்த இனப்பிரச்சினைத் தீர்வின் ஒருபடியாக 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையில் அரசியல் அதிகார பங்கீடு என்பது இந்திய முன்னாள் பிரதமர் ரஜுவ் காந்தி மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்தன ஆகயோரினால் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம்.
 
மாகாண நிருவாகத்துக்குட்பட்ட விடயங்கள் சரியான அரசியல் நிருவாகத்திற்குள் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான முழு அதிகாரம் கொண்டவர் முதலமைச்சர் என்பதைப் பற்றி தெரியாமல் அரசியல் தலைமைகள் முரண்பட்டுக்கொண்டிருக்pறார்கள்.
 
வெறுமனே சமூகத்தை ஏமாற்றுகின்ற அரசியல் தலைமைகளாக வழிநடத்திக்கொண்டிருக்கின்ற அரசியல் தலைமைகள் மாறாதவரைக்கும் சமூகம் மாற்றமடையாது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X