2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'முதலமைச்சரின் செயற்பாடு மாகாணத்தை தனிமைப்படுத்துமென்ற அச்சம் தோன்றியுள்ளது'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அரசியல் செயற்பாடானது மத்திய அரசோடு சேர்ந்து மாகாணத்தைக் கட்டியெழுப்புவதை விடுத்து, கிழக்கு மாகாணத்தை மத்திய அரசிலிருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துவிடுமென்ற அச்சம் தோன்றியுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் அப்பிரதேச அரசியல்வாதிகளின் முயற்சியினால் சில பாடசாலைகளில் கட்டப்பட்ட கட்டடங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் திறந்துவைத்து, இந்த மாவட்டத்தில் கீழ்;த்தரமான அரசியல் கலாசாரம் முன்னெடுக்கப்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அப்பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகளை ஓரங்கட்டிவிட்டு, ஒரே மாகாண சபையில் அங்கத்தவர்களாக இருக்கின்ற மாகாண சபை உறுப்பினர்களையும் புறந்தள்ளிவிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது அரசியல் அதிகார வெறியைக் காட்டி வருகின்றார்.

இவரின் இந்த நடவடிக்கை அவரின் கட்சிக்குள்ளேயே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் அவரின் கட்சித் தலைமைக்கும் கட்சி முக்கியஸ்தர்கள் முறையிடுவதை நாம் அவதானிக்கிறோம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் யாருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. அவ்வாறு அநீதி இழைக்கபடின், அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம்' எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X