2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முனைக்காடு தெற்கில் 30 குடும்பங்களுக்கு காணி உறுதிகள்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 14 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட முனைக்காடு தெற்குக் கிராம அலுவலர் பிரிவில் 36 வருடங்களாக காணி உறுதிப்பத்திரங்கள் இன்றியுள்ள 30 குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1981ஆம் ஆண்டில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் முனைக்காடு தெற்கில் 30 வீடுகளைக்; கொண்ட வீட்டுத்திட்டம்  அமைக்கப்பட்டது.

கடன் அடிப்படையில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட அவ்வீடுகளுக்கான கடனை  இம்மக்கள் கட்டி முடித்த பின்னரும் அவர்களின் காணிகளுக்கான  உறுதிப்பத்திரங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் தான் உட்பட முக்கிய அதிகாரிகளின்  கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.  

அம்மக்களுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை தொடர்பில்  கொழும்பிலுள்ள  காணி அலுவலகத்திலும்  திருகோணமலை மாகாணக்  காணி அலுவலகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து, பட்டிப்பளையில் திங்கட்கிழமை (13) காணிக்  கச்சேரி  நடத்தப்பட்ட நிலையில், மேற்படி வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .