Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட 102 நீர் தேங்கும் இடங்களில்; மூன்றில்; இரண்டு பகுதியில்; சட்டவிரோதக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அம்மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இதன் காரணமாக மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படவேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, பார் வீதியை அண்டியுள்ள தோணாவைத் துப்புரவு செய்யும் கொத்தணி வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். .
'மழைக்காலத்தைக் கருத்திற்கொண்டு இத்தோணாவைத் துப்புரவு செய்கின்றோம். ஆனால், அதிகமான தோணாக்கள் மக்களினால் முறையற்ற வகையில் அபகரிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான செயற்பாட்டால், அனைத்து மக்களும் பாதிக்கப்படும் நிலைமை உள்ளது. மழைக்காலத்தில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு இயற்கையான வடிகான்களாக இத்தோணாக்கள் காணப்பட்டன' எனவும் அவர் கூறினார்.
'மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்கள் கொத்தணியாக இணைந்து அவர்களுடைய பிரதேசங்களிலிருக்கின்ற வேலைகளை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஏற்படுத்தப்பட்டதாகும். இந்த சிரமதான நிகழ்வு முக்கிய நோக்கம் என்னவென்றால் உள்ளுராட்சி மன்றங்கள் வளம் நிறைந்த உள்ளூராட்சிமன்றங்களைப் பகிர்ந்துகொண்டு அந்த வளங்கள் உச்சமட்டத்தில் பகிர்ந்துகொண்டு பயன்படுத்தி மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யவேண்டும் என்பதாகும்' என்றார்.


15 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
35 minute ago