Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கை மின்சாரசபையின் பராமரிப்பு வேலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை முதல் 04 தினங்களுக்கு மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை காக்காச்சிவட்டை, சின்னவத்தை, பலாச்சோலை ஆகிய இடங்களிலும் சனிக்கிழமை மட்டக்களப்பு நகர பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகரசபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி, லேக் வீதி ஆகிய இடங்களிலும் எதிர்வரும் 21ஆம் திகதி குறுமண்வெளி, மகிழூர், எருவில் ஆகிய இடங்களிலும் எதிர்வரும் 22ஆம் திகதி வட்டவான், காயான்கேணி, மாங்கேணி, பனிச்சங்கேணி, வாகரை, மருதங்கேணி, தட்டுமுனை ஆகிய இடங்களிலும் காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்தது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago