Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களிலுள்ள மேய்ச்சல்தரைகளில் கால்நடைகள் மேயும்போது, அவற்றை இலக்குவைத்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையின விவசாயிகள் சிலர் சுட்டுக்கொல்வதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாத காலத்துக்குள் சுமார் 25 கால்நடைகள் சுடப்பட்டு இறந்துள்ளதாக கால்நடை வளர்ப்போர் சங்கம் கூறுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்மேற்குப் புற எல்லையிலுள்ள மயிலத்தமடு, மாதவனை ஆகிய இடங்களிலுள்ள மேய்ச்சல்தரைகளில் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ள கால்நடைகளே இவ்வாறு சுடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1974ஆம் ஆண்டு முதல் கால்நடைகளின் மேய்ச்சல்தரையாக பயன்படுத்தப்பட்டுவரும் இந்த இடங்களை யுத்தத்துக்குப் பின்னர் பெரும்பான்மையினத்தவர்கள் கைப்பற்றி சட்டவிரோதமாக பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்துவதால், மேய்ச்சல்தரை கால்நடைகளின் கொலைக்களமாக மாறியுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
ஆயினும், தங்களிடம் காணி உரிமை தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக பெருன்பான்மையின விவசாயிகள் சிலர் கூறினர்.
யுத்தத்துக்குப் பின்னர் இதுவரையில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் சுட்டுக்கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளதாக கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளரான கு.பொன்னுத்துரை தெரிவிக்கின்றார்.
குறித்த பயிர்ச்செய்கையாளார்களினால் கால்நடைகள் சிறைப்பிடிக்கப்பட்டு 10 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம்வரை பயிர் அழிவு என கூறி கப்பம் அறவிடப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago