Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மாற்றுத்திறனாளிகளை விற்று பிழைப்பு நடாத்தாமல் அவர்களை வாழவைக்கவேண்டும் என விரும்பினால் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு அந்த உதவிகள் வழங்கப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்லடி வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்யும் அரச நிறுவனமாக சமூகசேவைகள் திணைக்களம் மட்டுமே செயற்பட்டுவருகின்றது.கிழக்கு மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றுமுழுதான சேவையினை வழங்கிவருகின்றது.
சமூகசேவைகள் திணைக்களம் ஊடாக மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் ஓரளவு பூர்த்திசெய்யப்படுகின்றபோதிலும் அவர்கள் தேவைகள் பலவாறாக காணப்படுவதன் காரணமாக அவற்றினை முழுமையாக பூர்த்திசெய்யமுடியாத நிலையுள்ளது.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மாற்றுத்திறனாளிகளுடன் முழுமையாக இணைந்துசெயற்படுகின்றது. இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற பரா ஒலிம்பிக்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளையும் பங்குபெறச்செய்யவேண்டும் என்ற நோக்குடன் சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஒரு வாரம் மட்டுமே பயிற்சிகள் அளிக்கப்பட்டு 35பேர் அந்த போட்டியில் பங்குபெறச்செய்யப்பட்டனர்.
அவர்களில் 25பேர் பதக்கங்களைப்பெற்றனர்.பல பயிற்சிகளைப்பெற்றவர்களுடன் போட்டியிட்டு இந்த வெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர்.சில தங்கப்பதக்கங்களை மிகவும் குறைந்த நேரத்தில் தவறவிட்டனர்.அதன் பின்னர் அவர்களை அத்துறையில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் உருவாக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டு,14 சங்கங்களையும் இணைத்து மாவட்ட மட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஒன்றியமும் மாவட்ட செயலகத்தில் ஒரு அரசசார்பற்ற அமைப்பாக பதிவுசெய்யப்பட்டு இயங்கிவருகின்றது.
மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தினை அவர்களிடமே வழங்கவேண்டும் என்ற வகையில் சமூகசேவைகள் திணைக்களம் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றது.அவர்களின் தலைமைத்துவம் சரியான வழியில் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதிலும் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருந்துவருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் ஒன்றிணைத்த அமைப்பாகும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ விரும்பும் புலம்பெயர்ந்தவர்களானாலும் நிறுவனங்களாலும் இந்த அமைப்பு ஊடாக உதவிகளை வழங்குவதன் மூலம் ஏமாற்றும் செயற்பாடுகளோ,போலியான செயற்பாடுகளோ இல்லாமல்போகும் நிலைமையேற்படும்.
இந்த ஒன்றியத்திற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆதரவு வழங்கப்பட்டுவருகின்றது.எதிர்காலத்தில் இந்த அமைப்பின் ஊடாகவே இணைந்துசெயற்படுவோம் எனவும் உறுதியளித்துள்ளனர். ஆனால் ஓருசிலர் அச்சம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.முன்னாள் போராளிகளின் பட்டிலை தாருங்கள் என கேட்கின்றனர்.மாற்றுத்திறனாளிகள் பட்டிலை தாரங்கள் என்று அச்சம் ஏற்படுத்தும் வகையில் கோருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளை விற்று பிழைப்பு நடாத்துவதற்கு எவரும் முயற்சிக்ககூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிசெய்ய விரும்புபவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கொண்ட ஒன்றியம் உள்ளது.அதன்மூலம் உதவிகளை செய்யலாம்.
கடந்த காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவ புலம்பெயர் மக்களால் அனுப்பப்பட்ட பெருமளான பணங்கள் இடைத்தரகர்களினால் தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் ஒரு கட்டமைப்பின் ஊடாக செல்லவேண்டும்.
இங்கு மாற்றத்திறனாளிக்கு உதவிசெய்யவேண்டும் என விரும்பும் நல்லமனமுடையவர்கள் சிறியசிறிய உதவிகளை பிரித்துபிரித்து வழங்காமல் ஒருவருக்காவது அவரது தொடர் வருமானத்தினை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு தொழில்வாய்ப்பினை உருவாக்கும் வகையில் உதவியினை வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்துவாழவேண்டும்.அதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளை விற்று பிழைப்பு நடாத்தாமல் அவர்களை வாழவைக்கவேண்டும் என விரும்பினால் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு அந்த உதவிகள் வழங்கப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் யாரும் அரசியல்செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.
16 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
36 minute ago