Niroshini / 2016 நவம்பர் 26 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,பைஷல் இஸ்மாயில், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,நடராஜன் ஹரன்
“யுத்த சூழ்நிலையின் பின்னரும் சிறுபான்மை மக்களை அடக்கி ஆளுகின்ற மேலாதிக்க அகங்கார நிலைப்பாட்டை பெரும்பான்மை சமூகத்திடமிருந்து மாற்ற வேண்டிய தேவை மத்திய அரசாங்கத்துக்கு உள்ளது” என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 14 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட நான்கு மல்டிமீடியா இயந்திரம் மற்றும் 18 அலுமாரிகள் பாசாலைக்கள் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கு நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் ஜூப்றியா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்குவதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கான தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற நிலை காணப்படுகின்றபோது, சில குழுக்கள் திட்டமிட்ட வகையில் இனமுறுகலை ஏற்படுத்தி குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவது என்கின்ற விடயம், நாட்டை பிரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியுள்ளார். 13ஆவது அரசியல் சட்டத்தில் மாகாணங்களுக்கு காணி அதிகாரம் உள்ளது. இருக்கும் அதிகாரத்தை கொடுப்பது நாட்டைப் பிரிப்பதாக அமையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
மாகாணத்துக்கு பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரம் வழங்கக்கூடாது என சிலர் கூறுகிறார்கள். அதந்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் மாகாணத்திலுள்ள வெற்றிடங்களை சீரான கட்டமைப்புக்குள் திட்டமிட்டு செயற்படுத்தியிருப்போம்.
அதிகாரம் வழங்கப்படுவது நாட்டைப் பிரிப்பதாக அமையாது. வெறுமனே தமது பதவிகளை தக்கவைப்பதற்காக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயற்பாடாகவே அமையும்.
புதிய அரசியலமைப்பில் வழங்கப்படும் தீர்வு மக்களை மத்தியில் வாக்கெடுப்புக்குச் செல்லும் போது அதனைத் தோற்கடிக்கும் திட்டமிட்ட சதியின் வெளிப்பாடே இதுவாகும். இவ்வாறான சக்திகளை அரசாங்கம் அடையாளப்படுத்தி அவற்றுக்கான தகுந்த நடவடிக்கையெடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
29 minute ago
37 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
6 hours ago
21 Dec 2025