Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
புதிய அரசியலமைப்பு தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கையில், 'பதவி, சலுகைகளுக்காக துணை போயுள்ள முஸ்லிம் தலைமைகள்; ஆட்சியாளர்களிடத்தில் மதிப்பு இழந்து காணப்படுவதையிட்டு முஸ்லிம் சமூகம் கவலையடைகின்றது.
முஸ்லிம் சமூகத்தினது இருப்பை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவக் காரணமானவர்கள் சிறுபான்மை மக்களே. இந்த ஜனாதிபதியை முஸ்லிம், தமிழ் மக்களே தெரிவுசெய்தனர். ஆனால், இந்த அரசாங்கத்தில்; அமைச்சை அலங்கரிக்கும் எமது முஸ்லிம் தலைமைகள் எதனை எமக்காக பெற்று தந்துள்ளார்கள்?
புதிய அரசியலமைப்பு தீர்வுத்திட்டத்தில் எமது அபிலாஷைகளை உள்ளடக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். எனவே, எமது சமூகத்தினுடைய கல்விமான்கள், புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஓர் உயர்சபை உருவாக்கப்பட்டு அதனூடாக கவனம் செலுத்தப்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .