Suganthini Ratnam / 2016 நவம்பர் 28 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன் பேரின்பராஜா சபேஷ்,வடிவேல் சக்திவேல்
45 முஸ்லிம்கள் மாவீரர்களாகியுள்ளனர் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மாவீரர்களை நினைவுகூரும் தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில்; ஞாயிற்றுக்கிழமை (27) மாலை அனுஷ்டிக்கப்பட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரும் மாவீரர்களாகியுள்ளனர். ஆகவே, தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகம் செய்துள்ளார்கள்.
மாவீரர் தினம் என்பது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகும். இது போராட்டத்தைத் தூண்டும் செயல் அல்ல என்ற யதார்த்தத்தை பெரும்பான்மையின மக்கள் புரிந்துகொண்டு, தமிழ் மக்கள் செய்துள்ள தியாகங்களுக்கு மதிப்பளிப்பதற்கு முன்வர வேண்டும்' என்றார்.
'தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரை வீரர்களாக அரசாங்கம் புகழ்கின்றது. தங்களது உரிமைக்காக இன்னுமொரு இனம் போராடியிக்கின்றது என்பதைக் காட்டுகின்ற தினம் இந்த மாவீரர் தினமாக அமைகிறது.
இந்த நாட்டில் தங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்கள் செய்த கிளர்ச்சிக்கு இலங்கை அரசாங்கம் போராட்ட வடிவம் கொடுத்துள்ளது. போர் என்பது ஒரு நாடு, இன்னுமொரு நாட்டின் மீது செய்வதே போராகும். ஆனால், உள்நாட்டில் மக்கள் உரிமைக்காக போராடுவது போராகக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மாத்திரம் அல்ல, பல நாடுகளில் இடம்பெற்றுள்ளது' என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago