Niroshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
யானைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத் தலைவர் ரி.மேகராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த கால யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு,வறுமையினால் நலிவுற்று கூலித்தொழில் செய்வதற்கும் வழியற்றவர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற மக்களை யானைகளும் அட்டகாசம் செய்வது வேதனையைத் தருகிறது.
எனவே,காட்டுப் பகுதிகளை அண்டி வாழ்கின்ற மக்களை யானைகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்
அண்மைக் காலமாகப்படுவான்கரைப் பிரதேசத்தில் யானை தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றவுடன் அவ்விடத்துக்குச் சென்று யாரையேனும் குற்றம் சொல்லி ஊடகங்களுக்கு முகங்களைட்டுகின்றவர்களாக இருப்பதைத் தவிர்த்து அத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமலிருக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025