2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மகிழ்ச்சி ஆரவாரத்தில் காத்தான்குடி மக்கள்

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் இன்று புதன்கிழமை பட்டாசுகள் கொளுத்தப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தில் பிரதேசவாசிகள் ஈடுபட்டனர்.

இதன்போது,பிரதேசவாசிகள் காத்தான்குடி பிரதான வீதியில் குளிர்பானங்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காத்தான்குடி பிரதான வீதியின் 6ஆம் குறிச்சி மற்றும் முதலாம் குறிச்சி போன்ற இடங்களிலும் பாலமுனை, காங்கேயனோடை போன்ற இடங்களிலும் இந்த மகிழ்ச்சி ஆரவாரங்கள் நடைபெற்றன.

இதேவேளை,காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சுப்பதவி வழங்கப்பட்டமைக்கு நன்றி செலுத்தும் தொழுகை மற்றும் துஆப்பிராத்தனை என்பனவும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X