2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூரப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
 
மட்டக்களப்பு, மகிழடித்தீவு மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவுகூருவதற்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வின்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த அமர்வின்போது, மேற்படி இடங்களில் இடம்பெற்ற  படுகொலைகளில் உயிரிழந்தவர்களின் உறவினர்களே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மகிழடித்தீவிலுள்ள இறால் பண்ணையில் தொழில் செய்துகொண்டிருந்த 180க்கும் மேற்பட்டவர்கள், 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் கொக்கட்டிச்சோலை பகுதிகளிலும் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களை நினைவுகூருவதில் கடந்த காலத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அத்துடன், படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியும் படையினரால் சேதமாக்கப்பட்டது. எனவே, இந்த நல்லாட்சியிலாவது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X