Niroshini / 2017 மார்ச் 22 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
"காணாமல்போன எனது இரண்டு மகன்களில் ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். காணமல் ஆக்கப்பட்ட எனது இரண்டு பிள்ளைகளையும் தேடித்தாருங்கள்" என, மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம் பிரசேத்தைச் சேர்ந்த முருகுப்பிள்ளை திரேசா, கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள் இன்று நடாத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“எனது ஆண் பிள்ளைகள் இருவர், காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முருகுப்பிள்ளை வின்சன் சகாயராசாவை, 19.1.1986 அன்று, சுற்றிவளைப்பொன்றில், விசேட அதிரடிப்படையினர் அழைத்துச் சென்றனர். அன்று அவருக்கு 23 வயதாகும். ஆனால் இதுவரை எனது மகனுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது
"அதே போன்று எனது மற்றொரு மகனான முருகுப்பிள்ளை இமானுவேல்(சிறி) என்பரும் 19.7.2007 அன்று வெள்ளை வானில் கடத்தப்பட்டார். கடத்தப்படும் போது அவருக்கு 40 வயதாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .