Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்,எஸ்.சபேசன்
கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்ற இனப் படுகொலைகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலேயே அதிகமாக இடம்பெற்றுள்ளன.இந்த அவல நிலை என்றும் எம்மிடம் ஒரு மாறாத சுவடாகவே இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,புதுக்குடியிருப்பில் 17 பொதுமக்கள் இராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்டு 25 ஆண்டுகள் நினைவு கூரும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை புதுக்குடியிருப்பு நினைவுத் தூபியின் அருகில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் வட,கிழக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியளிக்கவில்லை.
ஆனால் அந்நிலை இன்று மாறி படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருவதற்குரிய சுதந்திரமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது இனப்படுகொலை அம்பாறை மாவட்டத்தில் வீரச்சோலையில் 56 பேரின் கொலையுடன் ஆரம்பித்து மல்லிகைத்தீவில் 12, அம்பாறை நகரத்தில் 23, வீரமுனையில் 238, சவளக்கடையில் 17 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டானில் 100, சவுக்கடியில் 31, புதுக்குடியிருப்பில் 17, சத்துருக்கொண்டானில் 185,கொக்கட்டிச்சோலையில் 152 மற்றும் வந்தாறுமூலையில் 131 பேரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஒரு இனத்தின் வரலாறு என்பது இனத்தின் கொலைகள், அவலங்கள், துன்பியல்கள் எல்லாம் அந்த இனம் மண்ணுக்காக விடுதலைக்காக போராடி இருக்கின்றது என்பதை இத்தகைய நினைவுகூரும் நிகழ்வுகள் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
அரசியல் தீர்வுக்கான பயணம் என்பது நாங்கள் செய்யும் கடமையில்தான் தங்கியிருக்கின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago