2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் கிராம சேவையாளர்கள் ஐவருக்கு இடமாற்றம் இரத்து

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்கள்; இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், இன்று (16)  தெரிவித்தார்.

இம்மாவட்டத்தைச் சேர்ந்த  கிராம சேவையாளர்கள் 81 பேருக்கு கடந்த மார்ச் மாதம் இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதனை அடுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம்  இடமாற்றம் வழங்கப்பட்ட கிராம சேவையாளர்கள்  மேன்முறையீடு செய்திருந்தனர். இந்த மேன்முறையீட்டைப் பரிசீலனை செய்தமைக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 5 பேருக்கு  இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ள ஏனைய கிராம சேவையாளர்கள் 76 பேரின் இடமாற்றங்களை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் பிரதேச செயலாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடமாற்றங்கள் எந்தவித பக்கச்சார்புமின்றி ஒழுங்கு முறையைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .