Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கக் காணிகளை பெரும்பான்மை இனத்தோருக்கு குத்தகைக்கு வழங்கி, பெரும்பான்மையின மக்களின் குடியேற்றங்களை அதிகரித்து, மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தோரின்; அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை (3) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவர்களின் இனப் பரம்பலைக் குறைக்கும் வகையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை குடியேற்றி, அதன் மூலம் தங்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற கடந்த கால ஆட்சியாளர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாத்திரம் பெரும்பான்மை இனக் குடியேற்ற நடவடிக்கையிலிருந்து ஓரளவு தப்பியிருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இங்குள்ள அரசாங்கக் காணிகளைக் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குத்தகைக்கு பெறப்படும் காணியில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, தொழில் வாய்ப்புக்காக தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் இங்கு குடியேற்றப்படவுள்ளனர். இதன் மூலம் தமது இனப்பரம்பலை அதிகரித்து இம்மாவட்டத்தில் பெரும்பான்மை இன அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க முயற்சிக்கின்றார்கள்' என்றார்.
24 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago