Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-த.தவக்குமார்
அடுத்த வருட முற்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வசதிகளும்; கொண்டதாக பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக பட்டிருப்புத்தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார அபிவிருத்தி; அமைச்சர் பி.ஹரிஸன் தலைமையில் அமைச்சின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (08) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பட்டிருப்புப் பிரதேசத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் தானும் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கான சகல ஆவணங்களும் அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் பிரதமரின் அனுமதியைப் பெற்று பொருளாதார மத்திய நிலையத்தை அமைத்;துத் தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago