Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1526.97 ஹெக்ரேயரில் தென்னம் தோட்டங்கள் காணப்படுவதுடன், 1,220 ஏக்கரில் வீடுகளில் தென்னை மரங்களும் காணப்படுகின்றன. இங்கு அதிகமாக பிளஸ் பாம் என்ற தென்னை இனமே அதிகம் நடப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்திச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பண்ணைத் திட்டமிடல் உத்தியோகஸ்தர் பெருமான் உதயச்சந்திரன் தெரிவித்தார்.
வருடாந்தம்; 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையான தென்னங்கன்றுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 64 என்ற அடிப்படையில் இலவசமாக தென்னை அபிவிருத்திச் சபையினால் தெங்குச் செய்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
மேலும், தெங்குச் செய்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் 05 ஏக்கர் செய்கைக்கு கொட்டில்கள் அமைப்பதற்கு மானிய அடிப்படையில் 35,000 ரூபாவும் நீர்ப்பான வசதி ஏற்படுத்த 40,000 ரூபாவும் உரம்; கொள்வனவுக்கு 60,000 ரூபாவும் வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக அரச வங்கிகள் ஊடாக 03 வீதம் வட்டி அடிப்படையில் கடன் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
தெங்குச் செய்கையின்போது சரியான நடுகை இன்மை, பூச்சிகளின் தாக்கம், பராமரிக்காமை காரணமாக காய்க்;கும் பருவத்துக்கு முன்னர் 60 சதவீதமான தென்னை மரங்கள் அழிகின்றன.
கருவண்டு, கம்பன புழு, கோசிரா போன்ற பூச்சி இனங்கள் கூடுதலாக தென்னை மரங்களைத் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பூச்சி கொல்லிகளை தெங்குச் செய்கையாளர்களுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .