Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்ற நிலையில், கடந்த 24ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிவரையான 48 மணி நேரத்தில் 331.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
இந்த மழையைத் தொடர்ந்து காத்தான்குடிப் பிரதேசத்தில் பெரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளதால், தொலைபேசிச் சேவை சீர்குலைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்வதினால் பட்டிப்பளையிலுள்ள வீதிகள் உட்பட பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிச்சையடி முன்மாரி, வாழைக்காலை, நாற்பதுவட்டை, தாந்தாமலை பிரதேசங்களுக்கான பஸ் சேவை தடைப்பட்டுள்ளன.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago