2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

24 மணிநேரமும் உணவகங்கள் கண்காணிப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 18 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல உணவு விடுதிகளும் 24 மணி நேரங்களும் கண்காணிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உணவு விடுதிகளையும் சோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகங்கள் இன்று சோதனைகளுக்கு உடபடுத்தப்பட்டன. இதன்போது சுகாதாரத்திற்கு உகந்தமுறையில் இல்லாத மூன்று உணவு விடுதிகள் மூடப்பட்டு அவர்களுக்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி தொடக்கம் சத்துருக்கொண்டான் வரையான பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் என்பன இணைந்து இந்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தன.

அத்துடன் பல உணவு விடுதிகளுக்கு உணவு தரம் மற்றும் சுகாதார நடைமுறைகள் உட்பட உணவு விடுதியை சிறந்த முறையில் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பாதுகாப்பான உணவினை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையிலும் கிழக்கு மாகாணத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X