Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மதங்களின் பெயரால் மனிதர்களைக் கொல்வதற்கும் தீங்கிழைப்பதற்கும் அனுமதிக்க முடியாதென கிழக்கு மாகாண வீதி, காணி மற்றும் மகளிர் விவகாரத் திறன் அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி தெரிவித்தார்.
ஏறாவூர், புன்னைக்குடா கடற்கரை வீதி மற்றும் மீராகேணி சவுக்கடிப் பிரதேசத்தை இணைக்கும் வீதி ஆகியன சுமார் 4 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பதற்கான வேலை ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டது.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சிலர் மதங்களை தங்களின் பிழையான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதால், ஆங்காங்கே அமைதியைக் குலைக்கும் பிரச்சினைகள் எழுகின்றன. மதங்கள் போதிக்கும் சிறந்த விழுமியங்களுக்கு எப்போதுமே எல்லோரும் தலை வணங்கவேண்டும். அதேவேளை, மதங்களின் பெயரால் வன்முறைகள் இடம்பெறுவதற்கு வழிசமைக்கக்கூடாது' என்றார்.
'மேலும், மனித சமூகத்தில் பெண்களும் ஓரங்கமாக உள்ளனர். எனவே, பெண்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆண்கள் மாத்திரம் இந்த உலகை ஆள முடியாது.
பெண்களை அரவணைத்து, ஆதரித்து, அறிவிலும் அபிவிருத்தியிலும் பங்காளர்களாக்கிக்கொண்டு இந்த மாகாணத்தை முன்னேற்ற வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago