Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'இந்நாட்டில் தொற்றுநோயாகவும் புற்றுநோயாகவும் பரவுகின்ற மதவெறியை ஒழிப்பதற்கு வழிசெய்ய வேண்டும். அப்போதே எதிர்காலச் சந்ததி நிம்மதியாக வாழமுடியும்' என மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியதட்டுமுனைக் கிராமத்தில் வசிக்கும் செல்லையா வெள்ளக்குட்டி (வயது 72) தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்களிடம் கருத்தறியும் அமர்வு, வாகரைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒருவர் தனக்கு விரும்பிய மதத்தை பின்பற்றி வாழ்வதற்கும் வழிபடுவதற்கும் அவருக்கு அரசியலமைப்பின்படி பூரண உரிமை உண்டு. ஆனால், நாட்டில் தற்போது உருவெடுத்துள்ள மதவெறி தொற்றுநோயாகவும் புற்றுநோயாகவும் பரவுகின்றது' என்றார்.
'எங்களைப் போன்றவர்களின் வாழ்நாள் முடிந்துள்ளது. இளம் சந்ததிக்கு மதவெறி அச்சுறுத்தலாகவும் அமைதியை விரும்பும் இந்த நாட்டுக்கு அவமானமாகவும் இருக்கின்றது. ஆகையால், இந்த நாடு மதவெறியால் பாதிக்கப்படுவதற்கிடையில் எம்மதத்தையும் எவரும் பின்பற்றி வாழலாமென்ற நல்ல செய்தியை நல்லிணக்கப் பொறிமுறைக்கூடாக மீண்டும் உறுதிப்படுத்துமாறு மன்றாடுகின்றேன்' என்றார்.
'இந்நாட்டின் அழகானது பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாமென்ற ஒரு கொடியில் பூத்த மலராக இருக்க வேண்டுமென்பதே எனது கனவு' எனவும் அவர் கூறினார்;.

15 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
35 minute ago