2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'யுத்த வெற்றியைக் காரணம் காட்டி கடந்த அரசாங்கம் நாட்டைச் சூறையாடியது'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

யுத்த வெற்றியைக் காரணம் காட்டி கடந்த அரசாங்கம் நாட்டைச் சூறையாடியுள்ளதென வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

'செமட்ட செவன கிராமத்துக்கு கிராமம் வீட்டுக்கு வீடு' எனும் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், வீடுகளைக் கட்டுவதற்கான உதவி வழங்கும் நடவடிக்கை மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, 422 பேருக்கு வீடமைப்புக் கடன் உதவியும் 215 பேருக்கு சீமெந்துப் பைக்கெட்டுகளும் வீடு கட்டுவதற்கான தொழிற்பயிற்சியை பூர்த்திசெய்த 83 பேருக்கு தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வெளிநாட்டில் இலங்கைக்கு அபகீர்த்தியை கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது  வெளிநாட்டில் இலங்கையின் புகழை ஓங்கச் செய்துள்ளதுடன், இலங்கை மீதான நன்மதிப்பையும் உருவாக்கியுள்ளது' என்றார்.

'கடந்த அரசாங்கத்தால் இந்த நாட்டில் நல்லிணக்கம், ஒற்றுமை சீர்குலைந்தது. யுத்த வெற்றியை வைத்து படையினரைக் காட்டி நாட்டைச் சூறையாடியதுடன், கொள்ளையடிக்கும் நடவடிக்கையையே கடந்த அரசாங்கம் மேற்கொண்டது' என்றார்.
'மேலும், இந்த நாட்டில் வீடுகள் இல்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முழுமையான நடவடிக்கையை எடுத்துவருகின்றோம். அந்த வகையில், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில்; வீடுகள் இல்லாத அனைவருக்கும் வீடுகளை நிர்மாணித்துக்கொடுத்து வீட்டுப் பிரச்சினையை முழுமையாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்' எனவும் அவர் கூறினார்.

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X