Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தப் பாதிப்புக்குள்ளான பெண்களை கைவிடமுடியாது. அமெரிக்காவும் இலங்கையும் இவர்களை மறக்கவில்லையென்பதை இவர்கள் அறியவேண்டுமென பூகோள மகளிர் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் கத்தரீன் ரஸ்ஸல் தெரிவித்தார்.
இலங்கையில் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலுக்கான அமெரிக்காவின் உறுதியான அர்ப்பணிப்பை விளக்கும் வகையில் இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த கத்தரீன் ரஸ்ஸல் நேற்று வியாழக்கிழமை அமெரிக்கா திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஊடகவியலாளர்களைச்; சந்தித்து நல்லிணக்கம், பொருளாதாரத்தை கட்டியெழுப்பல் மற்றும் பால்நிலைசார் வன்முறையை அடையாளப்படுத்துவதில் பெண்களின் முக்கியமான வகிபாகங்களை அவர் எடுத்துரைத்தார்.
பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துவது அனைவரினதும் முக்கிய ஆர்வமாக உள்ளதென்று அமெரிக்கா நம்புவதாக தூதுவர் ரஸ்ஸல் குறிப்பிட்டார்'
'யுத்தத்தால் வாழ்க்கைத்துணையை இழந்த மற்றும் குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் பெண்களுக்கான தொழிற்பயிற்சி, சிறுதொழில் கடன்கள், நல்லிணக்க மற்றும் உளவளத்துணை நிகழ்ச்சிகள் ஆகிய அமெரிக்காவின் தற்போதைய உதவிகளை தூதுவர் ரஸ்ஸல் சுட்டிக்காட்டினார்.
பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடங்கள் மற்றும் சட்ட உதவிகளை வழங்கும் இலங்கைப் பங்காளர்களையும் அவர் சந்தித்தார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago