2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,ஜே.எப்.காமிலா பேகம்

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீயான்குளம் கிராமத்தில் நேற்று புதன்கிழமை  யானை தாக்கியதில் ஓட்டமாவடியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான முஹைதீன்பாவா முஹம்மது ஹனீபா (வயது –56) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரமுனைக் கிராமத்திலுள்ள  தனது வயலுக்குச் செல்லும் வழியில் இவர் யானையின் தாக்குதலுக்குள்ளானார். இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X