Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுத்த காலத்தில் காணிகளை இழந்தவர்கள் தங்களின் காணிகளை மீளப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட விசேட சட்டம் காலாவதியாவதற்குள் அதன் மூலமான நன்மையைப்; பெறவேண்டுமென இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக பொறுப்பதிகாரியும் சட்ட ஆலோசகருமான மிருதினி சிறிஸ்குமார் தெரிவித்தார்.
யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருடகாலத்தில் தங்களின் பூர்வீக விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை இழந்தவர்கள், அக்காணிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கான சட்ட உதவி ஆலோசனைக் கூட்டம், ஏறாவூர் அஷ்ஹர் வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், '2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட திகதியிலிருந்து 02 வருடகாலத்துக்குள் இழந்த உங்களின் காணிகளை மீளப் பெறுவதற்கான வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இது யுத்த சூழ்நிலையை அடிப்படையாக வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்காக கொண்டுவரப்பட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமென்பதால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து 02 வருடங்களின் பின்னர்; செல்லுபடியற்றதாகிவிடும்' என்றார்.
'கால விதிப்புக்குரிய விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் மூலம் 1983 மே மாதம் முதலாம் தி;கதியிலிருந்து நாட்டில் யுத்தம் முடிந்த 2009 மே மாதம் 18ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காணிகளை இழந்தவர்கள் அக்காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யுத்த சூழ்நிலை, உங்களை உங்களுக்கு உரித்தான காணிகளிலிருந்து வெளியேற்றியிருந்தால், எந்தவிதத் தடைகளுமின்றி உங்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள இச்சட்டமூலம் வழிவகுக்கின்றது.
நீங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அல்லது இடம்பெயரச் செய்;யப்பட்டு அகதிகளாகி இத்தகைய சூழ்நிலைக்குள் நீங்கள் அகப்பட்டிருந்ததை நிரூபிப்பதற்கான சகல ஆவணங்களையும் நீங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் இச்சட்டத்தின் மூலம் உங்களின் காணிகளை மீளப் பெறுவதில் எந்தச் சிரமமும் இருக்காது,
உதாரணமாக, நீங்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்திருந்தால் அதற்கான பல்வேறு ஆவணங்கள் உங்களிடம் இருக்கக்கூடும். எனவே, யுத்தத்தால் பாதிக்கப்பட்டமை தொடர்பிலும் அதன் மூலமம் காணியை இழந்தமை தொடர்பிலும்; நீங்கள் நிரூபிப்பதற்கு சிரமப்பட வேண்டியதில்லை' எனவும் அவர் கூறினார்.

14 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
34 minute ago