2025 மே 07, புதன்கிழமை

விஞ்ஞான கண்காட்சி

Niroshini   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வழிகாட்டிகள் பூங்கா எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் முதன் முறையாக மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வழிகாட்டிகள் விஞ்ஞானப் பூங்காவின் செயலாளர் கலாநிதி ரீ. மதிவேந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இக்கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை (24) முதல் ஞாயிற்றுக்கிழமை (27) வரை மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள அரசினர் ஆசிரியர் கலாசாலையில் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது, விஞ்ஞான மாதிரிகள் , புத்தாக்கப் போட்டி ,நேரடி விஞ்ஞானப் பரிசோதனைகள், கலை கலாசாரம், வானியல், செயற்பாடுகள், பாரம்பரிய உணவுகளும் சிற்றுண்டிகளும், விஞ்ஞானத்தை சந்திக்கும் கலைஞன் ஆகியவற்றுடன் தினமும் காலையும் மாலையும் மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம் வழங்கும் மௌனகுருவின் 'தாண்டவ தகனம்' எனும் மகாபாரதப் போரின் பின்னணியில் இருந்த இயற்கை அழிப்பை அடிப்படையாகக் கொண்ட நவீன நாடகம், கண்காட்சி என்பன இடம்பெறும்.

அனுமதிக்காக மாணவர்களுக்கு 20 ரூபாய் கட்டணமும் வளர்ந்தோருக்கு 50 ரூபாய் கட்டணமும் அறவிடப்படும்.

இதேவேளை,தொடர்ந்து 4 தினங்களும் மாலை வேளையில் வீதி நாடகங்களும் இடம்பெறவுள்ளன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X