2025 மே 07, புதன்கிழமை

“விஞ்ஞானம் எமக்கு சொந்தமானது”

Niroshini   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

விஞ்ஞானம் எமக்கு சொந்தமானது.அதனை நாங்கள் கையில் கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் கே.அருள்நிதி தெரிவித்தார்.

மாணவர்கள் மத்தியில் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கவும் புதிய கண்டுபிடிப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் விசேடமாக உருவாக்கப்பட்ட 'வழிகாட்டிகள் விஞ்ஞான பூங்கா' கண்காட்சி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

விஞ்ஞானம் எமக்கு சொந்தமானது.அதனை நாங்கள் கையில் கொள்ளவேண்டும்.வேறு யாரும் எம்மை விஞ்ஞானம் என்று கூறி ஒன்றைக் காட்டும்போது அதனையே பின்பற்றும் நிலையில் நாங்கள் உள்ளோம்.

விஞ்ஞானம் என்பது ஒரு வித்தியாசமான அமைப்பாக மாறிவிட்டது.அதனை தடுப்பதற்கு விஞ்ஞானத்துக்கு புதுவடிவம் வழங்கி அதன்மூலம் உருவாக்க விஞ்ஞானத்தினை கைக்கொள்ளும்போதே மேலைநாட்டவர்களின் விஞ்ஞானத்தினை விஞ்சி செல்லமுடியும்.

இல்லாவிட்டால் அவர்கள் வழங்கும் விஞ்ஞானத்தினையே கைக்கொள்ளும் நிலைமை ஏற்படும்.அதனை தடுப்பதற்கே இவ்வாறான அமைப்பினை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.இது ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடத்தில் பல முன்னேற்றத்தினை கண்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X