Niroshini / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்
செமட்ட செவன கிராமத்துக்கு கிராமம் வீட்டுக்கு வீடு எனும் தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கான நிதி உதவிகள் இன்று(13) அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.யோகேஸ்வரன், அலிசாஹீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, 422 பேருக்கு வீடமைப்பு கடன் உதவி மற்றும் 215 பேருக்கு சீமந்துப் பக்கெட்டுக்கள், வீடு கட்டுவதற்கான தொழிற் பயிற்சியை முடிந்த 83 பேருக்கு தொழில் உபகரணங்கள் என 69.375 மில்லியன் ரூபா நிதியுதவிகள் வழங்கப்பட்டதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.


2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago