2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

800 வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, பட்டிப்பளை, போரதீவுப்பற்று, செங்கலடி  ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 800 வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழ் மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 200 வீடுகள் படி  கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு வீடும் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கட்டிக்கொடுக்கப்படவுள்ளது.

போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 5 கிராமங்களிலும் இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X