2025 மே 06, செவ்வாய்க்கிழமை

1,080 வீடுகள் முடியும் தறுவாயில்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 03 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,080 வீடுகளுக்கான நிர்மாணிப்புப்பணி முடியும் தறுவாயிலுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

மேலும், நிர்மாணிக்கப்பட்டு பூரணத்துவப்படுத்தாத 1,000 வீடுகளின் வேலைகளை இம்மாதத்தினுள்; பூரணப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகள் தெரிவு இடம்பெறுகின்றது. இதன்போது, வீட்டு வேலைகளை பூரணப்படுத்துவதற்காக 10 சீமெந்துப் பக்கெட்டுக்களை மேற்படி வீட்டுக் குடியிருப்பாளர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

25 மாவட்டங்களுக்கு 25 வீடுகளைக் கொண்ட 25 மாதிரிக் கிராமங்கள் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு, மயிலாம்வெளிக் கிராமத்தில் 25 வீடுகளுக்கான வேலை கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கக் காணி 15 பேர்ச், வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 500 சதுர அடிப் பரப்பில் 02 படுக்கை அறைகள், ஒரு சமையல் அறை, ஒரு மண்டபம் உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் 250,000 ரூபாவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை கடனாக வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, ஏற்கெனவே வீடுகளை அமைத்துக் கொடுத்தமைக்காக பயனாளிகளிடமிருந்து தங்களுக்குக் கிடைக்கின்ற மீளளிப்பு நிதியில் மாதம் 05 மில்லியன் ரூபாய் நிதியை மீதப்படுத்தி 05 மாதங்களில் 25 மில்லியன் ரூபாவில் 250 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நான்கு திட்டங்களும் மிக நெருக்கடியான நிகழ்ச்சிநிரலின் கீழ் செய்து முடிக்கவேண்டியுள்ளதுடன், இதற்கு பயனாளிகள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X