Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வீட்டுத்தோட்டச் செய்கையில் ஆர்வம் காட்ட வேண்டும் என காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியில் இன்று வியாழக்கிழமை காலை வீட்டுத்தோட்ட செய்கையினை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாம் நமக்குத் தேவையான மரக்கறி வகைகள் மற்றும் கறி மிளகாய் போன்றவற்றை வீட்டுத்தோட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
இராசாயன மருந்துகள் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளை நாம் உண்ணுவதால் பல்வேறு நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மருந்து அடிக்காத நமது வீட்டில் செய்கை பண்ணப்படும் மரக்கறிகளை நாம் உண்ணுவதன் மூலம் சிறந்த போசாக்கினை பெறமுடியும். இதனால் நாம் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஆர்வம் காட்ட வேண்டும்.
வீட்டுத்தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரக்கறிகளை நாம் உற்பத்தி செய்வது போல் பழங்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago