Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்ட செயலக வாணி விழா இன்று புதன்கிழமை மாவட்ட செலயக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இவ்விழாவில் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ணமிசன் தலைவர் சதுஸ்புஜானந்தா மகாராஜ் கலந்து கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார்.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்ரங்கநாதன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, கணக்காளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது,கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி, வின்சன்ட் மகளிர் தேசியப் பாடசாலை உள்ளிட்ட பாடசாலை மாணவிகளின் இசை, நடன நிகழ்வுகள் நடைபெற்றன.
வாணி விழாவின்போது சேகரிக்கப்படுகின்ற நிதியில் இருந்து ஒவ்வொரு பிரதேச செயலகங்களினாலும் 2014ஆம் ஆண்டு பாடசாலைக்கு முதலாம் ஆண்டுக்கு சேரவிருக்கும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 10 சிறார்களைத் தெரிவு செய்து அவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கி கலைவாணி கல்விக்கு ஆதாரம் திட்டத்தினை முன்னெடுக்குமாறும் இத்திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட குறித்த 10 சிறார்களும் பல்கலைக்கழகம் செல்லும்வரை தொடர்ச்சியாக வருடா வருடம் கற்றல் உபகரணங்கள் மற்றும் முடியுமான உதவிகளை வழங்குமாறும் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு பாடசாலைக்குச் செல்லவிருக்கும் 10 சிறார்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago