Niroshini / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டோரின் தரவுகள் பெறப்படாத நிலையில் இலங்கையின் நகரங்களில் உள்ள மக்களில் 25 வீதத்தினர் பாதிக்கப்பட்டள்ளனர். மட்டக்களப்பில் தரவுகளைப் பெற்றால் 25 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரழிவு அறிவூட்டல் நிலையத்தின் நீரழிவு மற்றும் அகங்சுரப்பு நோய் நிபுணர் வைத்தியக் கலாநிதி தர்சினி கருப்பையாப்பிள்ளை தெரிவித்தார்.
நீரிழிவு நோய் ஏற்படும் முறைகள் அவற்றைக் கட்டப்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வூட்டும் வீதிநாடகம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் இந்நோய் பற்றி விழிப்பாகவிருப்பதோடு நோயுற்றவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் ஒவ்வோரு மாதமும் வைத்தியப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
மேலும்,நாளை புதன்கிழமை வவுணதீவு பிரதேச செயலகத்தில் இலவசமாக இரத்தப் பரிசோதனை, குருதியமுக்கப் பரிசோதனை இடம்பெறுவதோடு போசணை உணவுகள் பற்றிய ஆலோசனையும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

15 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago