Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
ஜெனீவா உடன்படிக்கையை அரசாங்கம் இழுத்தடிக்காமல் விரைவாகச் செயற்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அமைப்பின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான சனிக்கிழமை (10) மட்டக்களப்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'ஜெனீவா உடன்படிக்கையை அரசாங்கம் இழுத்தடிக்காமல் விரைவாகச் செயற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்' என்றார்.
'காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டிய சட்டமூலம் சிவில் அமைப்புகளிடம்; ஆலோசனைகளைப் பெற்று ஆக்கப்படுவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான அலுவலகம் கொழும்பில் அமையவுள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளன. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட, பிரதேச ரீதிகளாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும்.
அப்போதே பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக அமையும். நிலைமாறு கால நீதி ஊடாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற விடயங்கள் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.
இதனையும் அரசாங்கம் மிக விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். சிறுபான்மையின மக்களுடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான சில சதிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன' எனவும் அவர் கூறினார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago