Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் 20 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆய்கூடம்; புதன்கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போது கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் 4,000 பேர் உள்ளனர். இவர்களின் கல்வித்தரத்துக்கேற்ப வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதில் பல்வேறு சிரமங்களை மகாணசபை எதிர்நோக்கியுள்ளது' என்றார்.
'நவீன காலத்தில் ஆங்கிலமொழி அறிவும் தொழில்நுட்ப அறிவும் கொண்ட பணியாளர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கேள்வி அதிகமாகவுள்ளது. இவை இரண்டையும் அடிப்படைத் தகைமையாகக் கொண்ட ஒருவர் இலகுவாக வேலைவாய்ப்பை பெறமுடியும்.
மாணவர்கள் பாடசாலைக் கல்வியைத் தொடரும்போதே ஆங்கிலமொழி மற்றும்; தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் தியாவட்டுவான் அரபா வித்தியலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரமும், வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயம், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை, ஓட்டமாவடி சாஹிரா வித்தியாலயம் என்பவற்றுக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயம் என்பவற்றில் தலா இருபது மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண கல்லி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, உதவி கல்வி பணிப்பாளர்கள், கோட்ட கல்வி பணிப்பாளர் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago