Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
இப்பிரதேசத்தில் விளையாட்டுப் பயிற்சிக் கூடம் இல்லாததாலும் சிறந்த வசதி வாய்புக்கள் இல்லாததாலும் எமது மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்வது என்பது இடர்பாடாகவே உள்ளது. இதன்காரணமாக பட்டிருப்பு கல்வி வலயத்துக்கு விளையாட்டுப் பயிற்சிக் கூடத்தை அமைத்துத்தர உத்தேசித்துள்ளோம். இப்பிரதேசத்தில் களுதாவளை மகா வித்தியாலயம், ஒரு மத்தியில் அமைந்துள்ளதால் அமையவிருக்கின்ற விளையாட்டுப் பயிற்சிக் கூடம் இப்பாடசாலையில் அமையப்பெறலாம் என கிழக்கு மகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேயவர்த்தன தெரிவித்தார்.
களுதாவளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி வித்தியாலய அதிபர் எஸ்.அலோசியஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை (12) மாலை நடைபெற்றது.
இதில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
களுதாவளை மகா வித்தியாலயம் பல கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கியுள்ளது. விளையாட்டு என்பது மிக முக்கியமாகக் காணப்படுகின்றது. ஆனாலும். விளையாட்டானது பாடசாலைகளில் இணைப் பாடவிதானமாகத்தான் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு துரதிஸ்ட்டமாகும்.
ஆனால், இவ்விளையாட்டை பாடசாலைகளில் பிரதான பாடங்களுள் ஒன்றாக இணைக்க வேண்டும் என தற்போது பல கல்வியியலாளர்களும் புத்திஜீவிகளும் கோரிவருகின்றனர். இக்கோரிக்கை வெகுவிரைவில் நிறைவேறும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
இக்கோரிக்களை நிறைவேறும் பட்டசத்தில் எதிர்காலத்தில் பாடசாலைகளில் விளையாட்டானது பிரதான பாடங்களுள் ஒன்றாக இணைக்கப்படும்.
தற்போது இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சாக் விளையாட்டு நிகழ்வுகளில் எமது நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் கலந்து கொண்டு பல பதக்கங்களைப் பெற்று எமது நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். இதுபோல் இப்பிரதேச மாணவர்களும், தேசிய சர்வதேச ரீதியில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.
எமது நாட்டின் மாணவர்கள் மத்தியில் மிகுந்த திறமைகள் காணப்படுகின்றன. அத்திறமைகளை மென்மேலும் விருத்தி செய்ய வேண்டும். இவற்றுக்கு பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் முன்வந்து சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தின் கல்வியமைச்சின் செயலாளராகிய நான், இப்பாடசாலைக்குரிய கல்வி வளர்ச்சிக்கு சிறந்த முயற்சிகளை மேற்கொள்வேன். இருப்பினும், எமக்கு நிதிப் பற்றாக்குறை காணப்படுகின்ற காரணத்தினால் தேவைகளை உடன் பூர்தி செய்வதென்பது கடினமான விடையமாகும்.
இப்பிரதேசத்தில் விளையாட்டுப் பயிற்சிக் கூடம் இல்லாததாலும், சிறந்த வசதி வாய்புக்கள் இல்லாததாலும், எமது மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்வது என்பது இடர்பாடாகவே உள்ளது. இதன்காரணமாக பட்டிருப்பு கல்வி வலயத்துக்கு விளையாட்டுப் பயிற்சிக் கூடத்தை அமைத்துத்தர உத்தேசித்துள்ளோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago