2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'வாழைச்சேனை கடதாசி ஆலையை கைத்தொழில் பேட்டையாக உருவாக்க பிரதமர் அனுமதி'

Thipaan   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஏ.எஸ்.எம்.யாசீம்

தூர்ந்து போய்க்கிடக்கும் மட்டக்களப்பு, வாழைச்சேனை கடதாசி ஆலையினை கைத்தொழில் பேட்டையாக உருவாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடாத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதனால் வாழைச்சேனை கடதாசி ஆலையினை கைத்தொழிற்பேட்டைக்குள் உள்வாங்கி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன் மூலம் கடதாசி ஆலையில் பணிபுரியும் சகல ஊழியர்களும் உள்வாங்கப்பட்டு மீண்டும் வழமையான முறையில் அதன் பணிகள் ஆரம்பமாகும் என்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட்  தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X