2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை திறக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மூடப்பட்டுக் காணப்படும் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையைத் திறப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, நேற்று (10)  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நல்லது செய்வதாயின்,  இந்தக் கடதாசி தொழிற்சாலையை நவீன வசதிகளுடன் புனரமைத்து, இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பல இடங்களில் தொழில் பேட்டைகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் அமைக்கப்படுவதாக அறியக் கிடைத்துள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின்  படுவான்கரையிலும்; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், அரசாங்கக் காணிகள், நீர் வளம் போன்றன இருந்தும்,  அங்கு எந்தவித தொழில் பேட்டைகளையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, சிறுபான்மையின மக்களால் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கம், இதனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .