Niroshini / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக கிழக்கு மாகாணத்தில் பனையோலை கைப்பணி பயிற்சியை ஆரம்பித்துள்ளோம். இதனை பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னனேற்றமடைய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண வீதி,காணி அபிவிருத்தி, மனதவலு, மகளிர் விவகார அமைச்சர் டபிள்யூ,ஜீ,எம்.ஆரியவதி களபதி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மாவடிவேம்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை பனையோலை கைப்பணி பயிற்சி நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தில் பனையோலை கைப்பணி பயிற்சிக்காக நான்கு இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் சுவாமிநாதனுடன் இணைந்து மேலும் உதவிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
சரியான பயிற்சிகளைப் பெற்று உங்களது பனையோலைக் கைப்பணிப் பொருட்களை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வீதியோரங்களில் சிறிய கடைகளை அமைத்து விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறக்கூடியதாக இருக்கும்.
மூன்று மாத கால பயிற்சிகளை முடித்துவிட்டு வீடுகளில் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உங்களது சுயதொழிலை ஊக்குவிப்பதற்காக வங்கிகளை கடன்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்துள்ளோம் என்றார்.

46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago