Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வடக்கு,கிழக்கில் உள்ள விவசாய நிலங்கள் பல இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேதான் இருக்கின்றன.விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதிலிருந்து இலங்கை இராணுவம் இன்னமும் விலகவில்லை என வட மாகாண விவசாய, கால்நடை, நீர்ப்பாசன, நீர் வழங்கல் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பி. ஐங்கரநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, சித்தாண்டி வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கிழக்கின் எழுச்சி விவசாய கண்காட்சியின் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கின்ற முதுகெலும்பு விவசாயமாகும். யுத்தத்துக்கு முற்பட்ட காலத்தில் விவசாயிகளே பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைந்திருந்தார்கள். ஆனால், இன்று அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது.
போரின் அழிவு போர் முடிந்து பல வருடங்களாகி தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோதும் கூட தீர்ந்தபாடில்லை.
குறிப்பாக, பெரும் விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகள் பல படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. விவசாயத்தில் இராணுவத்தினரின் தலையீடு இன்னும் நீங்கிய பாடில்லை. விவசாயிகளின் வாழ்க்கை இன்னும் விடிந்தபாடில்லை என்றார்.
மேலும்,தேசிய அரசாங்கத்தில் இடம் பிடித்திருக்கின்ற பேரினவாதக் கட்சிகள் இராணுவத்துக்கு ஒரு களங்கமும் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.
மக்களின் மாடுகளைக் கைப்பற்றி பால் கறந்து மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து பயிர் செய்து இலாபமீட்டிக் கொண்டிருக்கும் இராணுவத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு தேசிய அரசாங்கம் வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago