2025 மே 08, வியாழக்கிழமை

'வண்ணமும் வடிவும்' கண்காட்சி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் ஓவியங்கள், சிற்பங்கள் கைவினை மற்றும் புத்தாக்க 'வண்ணமும் வடிவும்' என்ற தலைப்பில் கட்புலக் கலைகளின் கண்காட்சி இம்மாதம் 16, 17, 18ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளதாக அப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல்; கற்கைகள் நிறுவகம் அறிவித்துள்ளது.

இக்கண்காட்சியை பார்வையிடுவதற்கு அனுமதிச் சீட்டாக மாணவர்களுக்கு- 20 ரூபாவும், வளர்ந்தோருக்கு- 50 ரூபாவும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிரமத்தைத் தவிர்ப்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கான அனுமதிச் சீட்டுக்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X