2025 மே 09, வெள்ளிக்கிழமை

35 வயதைக் கடந்த பட்டதாரிகள் பற்றி எடுத்துரைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 வயதைக் கடந்துள்ள சுமார் 50 பட்டதாரிகள் நிரந்தர நியமனத்துக்காக காத்திருக்கின்றமை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் சவால்கள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிடம் தமது சங்கம் எடுத்துரைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் யூ.உதயவேந்தன் தெரிவித்தார்.

அரசாங்க நியமனங்கள் யாவும் 35 வயதுக்குட்பட்ட  பட்டதாரிகளுக்கு வழங்கப்படுமென்ற நடைமுறைச் சாத்தியம் இருப்பதால், 35 வயதைக் கடந்துள்ள நிலையில் நிரந்தர அரசாங்கத் தொழில்களுக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு முதலமைச்சரைக் கேட்டுக்கொண்;டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாணசபையின் நியமனங்களில் தாம் கரிசனை கொள்வதாக முதலமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளார்.

கடந்த யுத்தமே கிழக்கு மாகாணத்திலுள்ளவர்களில் சிலரை காலதாமதமாகிய பட்டப்படிப்புக்கு பின்தள்ளியதாகக் கூறிய யூ.உதயவேந்தன், நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்து 35 வயதைக் கடந்துள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்க வழி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X